முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளி குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்கு புறப்பட்ட சுவாமி குமரவிடங்க பெருமான்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழாவில் இன்று தேரோட்டம் நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு பகலில் சுவாமி குமரவிடங்க பெருமான், சுவாமி அலைவாயுகந்த பெருமான் ஆகியோர் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இன்று பத்தாவது திருவிழாவை முன்னிட்டு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் காலை 6.30 மணிக்கு மேல் மீன லக்கனத்தில் துவங்குகிறது. நாளை 11-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்துள்ளதால் நகர பகுதி எங்கும் விழாக்கோலம் பூண்டுள்ளது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கோட்டைமணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago