முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையம் சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அவற்றுள் மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த சுபஸ்ரீ மற்றும் சுபாஷினி மூன்றாம் இடமும், சுபாஷ் பவர் பாய்ண்ட் போட்டியில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற விழாவில் ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் பதினெட்டாம் படியான் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளரும் முதல்வருமாகிய ஆர்.ஜெ.வி. பெல் மற்றும் துணை முதல்வர் கஸ்தூரி பெல் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்