முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் வேதா விருதுகள் வழங்கி உலக மகளிர் தினக் கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி வேதா கன்ஸ்ட்ரக்ஷன் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்விற்கு லெசிதா வேதநாயகம் தலைமை வகித்தார். ராஜம் தாம்சன், சரண்யாமனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரமிளாரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாணவி தீப்தியின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபார் அனைவரையும் வரவேற்று நோக்க உரையாற்றினார்.மார்ச் 8 ஒரு நாள் போதுமா என்ற தலைப்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கெங்கம்மாள் அவர்கள் உரைவீச்சு நிகழ்த்தினார். காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா வருணி 2017ம் மகளிர் தினவிழாவின் கோட்பாடான பி போல்ட் வித் சேஞ்ச் என்ற தலைப்பில் ஆங்கில உரையாற்றினார். ஜி.வி.என் கல்லூரி மாணவி லாவன்யா நாட்டின் கண்களான பெண்களை நாளும் பாதுகாப்போம் என்று பேசினார். நல்லாசிரியர் ராஜாமணி ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி வினோபா, ஆசியா பார்ம்ஸ் பாபு, பொன்னுத்தாய் வாழ்த்துரை வழங்கினர். இல்லத்தார் நடுநிலைப்பள்ளி ஆசிரியை கோமதி, ஜி.வி.என் கல்லூரி மாணவி திவ்ய பிரபா புனித ஓம் மெட்ரிக் பள்ளி மாணவியர்கள் பெண்களின் மாண்பு குறித்த பாடல்களை பாடினர். தேசிய நல்லாசிரியை விநாயகா சுந்தரி லட்சுமிமில் துவக்கப்பள்ளி ஆசிரியை மணிமொழி நங்கை கவிதைகள் படைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் கோவில்பட்டி நகர சபைத் தலைவி மல்லிகா, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 150 மகளிருக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் வேதா விருதுகள் வழங்கி கௌரவித்தார். வேதா கன்ஸ்ட்ரக்ஸன் இயக்குநர்கள் வேதநாயகம், மனோஜ், அரிமா வெங்கடாசலம், அரிமா பிரபாகரன், ஓய்வு பெற்ற முதல்வர் டாடா பிள்ளை பாலசுப்பிரமணியம், சன் முருகன், நாலாட்டின்புத்தூ}ர் பி.எஸ்.என்.எல் இளநிலை பொறியாளர் சவரிராஜ், எட்டையாபுரம் மினிமுத்தூட் கிளை மேலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்