முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 33வது விளையாட்டு விழா

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி கே.ஆர்.நகர்இ நேஷனல் பொறியியல் கல்லூரி, 33 வது விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இந்திய கபாடி அணியின் பயிற்சியாளர் கே..பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு இறுதிச் சுற்றுப் போட்டிகளை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மானவ மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி நிர்வாக இயக்குநர் அருணாசலம் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் . சொக்கலிங்கம் மற்றும் கல்லூரி முதல்வர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூன்றாமாண்டு இயந்திரவியல் துறை துறை மாணவர் ராஜேஷ் வரவேற்புரை ஆற்றினர். மூன்றாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர் வெங்கடேஷ் என்ற பெரியசாமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தார்.உடற்கல்வித்துறை இயக்குநர் ரகு விளையாட்டுதுறை ஆண்டறிக்கையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக 18ம் மண்டலத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் இக்கல்லூரி ஆண்கள் அணி டென்னிஸ் போட்டியில் முதலிடம் பெற்றது மற்றும் பெண்கள் பேட்மிட்டன் அணி இரண்டம் இடம் பெற்றது என்று குறிப்பிட்டார். மேலும் ஆண்கள் கிரிக்கெட், பால் பேட்மிட்டன் மற்றும் பெண்கள் செஸ் , டேபிள் டென்னிஸ் அணிகள் முறையே மூன்றாமிடம் பெற்றது என்றும் குறிப்பிட்டார.கல்லுரியின் சார்பாக அண்ணா பல்கலைக்கழக மண்டலம் 18 க்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் பேட்மிட்டன் போட்டிகள் 2016 ம் ஆண்டு ஆகஸ்ட் 30 மற்றும் 31 தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது என்றும, தமிழ்நாடு மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் 2016 ம் ஆண்டு நவம்பர் 5 முதல் 8 தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது என்றும் குறிப்பிட்டார். மேலும் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டிகள் 2016 ம் ஆண்டு டிசம்பர் 30 மற்றும் 31 தேதிகளில் நடை பெற்றதாகவும் குறிப்பிட்டார் .இக் கல்லூரியின் முதலாம் ஆண்டு கணிப்பொறி துறை மாணவர் ராஜா கௌதம் பல்கலை கழகங்களுக்கு இடையேயான வில்வித்தை போட்டிகளில் அண்ணா பல்கலை கழக சென்னை அணியை வழி நடத்தினர் என்றும் குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என வலியுறித்தினார் மேலும் மாணவர்கள் தமது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி நடந்தால் வாழ்வில் உன்னதமான நிலையை அடையாளம் என்று எடுத்துரைத்தார். இவ்வருடத்திற்தான தனிநபர் சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் 15 புள்ளிகளுடன் இறுதியாண்டு இயந்திரவியல் துறை மாணவர் மைக்கேல் செல்டனும் பெண்கள் பிரிவில் 15 புள்ளிகளுடன் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு துறை மூன்றாம் ஆண்டு மாணவி குமதினியும் பெற்றனர். மேலும் இவ்வருடத்திற்கான் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் மஞ்சள் அணி 37 புள்ளிகளுடனும் பெண்கள் பிரிவில் 18 புள்ளிகளுடன் மூன்றாம் ஆண்டு பெண்கள் அணியும் பெற்றன. இதனை தொடர்ந்து சிறப்பு விருந்துனர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இவ்விழாவில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கண்ணப்பன் இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுரியின் முதல்வர் குப்புசாமி மற்றும் கல்லூரியின் பல்வேறு துறைத்தலைவர்கள் போரசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வரின் வழிகாட்டுதலின்படி உடற்கல்வித்துறை இயக்குநர்கள் ரகுஇ கீதா மற்றும் மாணவர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago