முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியா மன்னர் வருகைக்காக மேலாடை இல்லாத பெண் சிலைகளை மறைக்க பாலித் தீவு மக்கள் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

ஜகார்த்தா - சவுதி அரேபியா மன்னர் வருவதால் மேலாடை இல்லாத பெண் சிலைகளை மறைக்க முடியாது என பாலித் தீவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுற்றுப்பயணம்
சவுதி அரேபிய மன்னர் சல்மான் இந்தோனேசியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அங்குள்ள பாலித் தீவுக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு சவுதி அரேபிய மன்னரும், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விதோதாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.இந்த சந்திப்பு ஜகர்தா அருகே உள்ள போகோர் அரண்மனையில் நடைபெற்றது. இந்த அரண்மனையில் பழங்கால சிலைகள் ஏராளமாக இருந்தன. அதில், பெண்கள் திறந்த மார்புடன் உள்ள சிலைகளும் இருந்தன. அரண்மனைக்கு சவுதி அரேபிய மன்னர் வந்ததால் பெண்கள் அரை நிர்வாணமாக இருந்த சிலைகள் துணியால் மூடப்பட்டன.

மக்கள் எதிர்ப்பு
தற்போது பாலித் தீவுக்கும் மன்னர் சல்மான் செல்கிறார். பாலித்தீவில் பல்லாயிரக்கணக்கான இந்து கோவில்கள் உள்ளன. அங்குள்ள கோவில்களிலும் மற்ற இடங்களிலும் மேலாடை இல்லாமல் பெண் சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை மூடி மறைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், இதற்கு பாலித் தீவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மூடி மறைக்க முடியாது
இது தொடர்பாக அரசின் செய்தி தொடர்பாளர் தேவ மகேந்திரா கூறும்போது, ‘ஆதிகாலத்தில் இந்தோனேசிய பெண்கள் மேலாடை அணியாமல் இருந்துள்ளனர். எனவே, அந்த காலத்தில் செய்த சிலைகள் மேலாடை இல்லாமல் இருக்கின்றன. சவுதி அரேபிய மன்னர் வருகிறார் என்பதற்காக அவற்றை மூடி மறைக்க முடியாது. தினமும் லட்சக்கணக்கான வெளிநாட்டு மக்கள் இங்கு சுற்றுலா வருகிறார்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலாடை அணியாத பெண்கள் சிலை என்பது எங்களுடைய கலாச்சாரத்தில் ஒன்று அதை யாருக்காகவும் மூடி மறைக்க முடியாது’ என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago