முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட் போன்கள் - டிவி மூலம் வேவு பார்க்கும் அமெரிக்க உளவு நிறுவனங்கள் !

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - ஸ்மார்ட்போன்கள்- ஸ்மார்ட் டிவி மூலம் அமெரிக்க உளவு நிறுவனங்கள் சிஐஏ, எப்பிஐ வேவு பார்ப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்கிலீக்ஸ்
சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன தொலைக்காட்சி சாதனமான "ஸ்மார்ட் டிவி'க்களில் குறிப்பிட்ட மென்பொருளை பதிவு செய்துள்ளதன் மூலம், அந்த சாதனம் வழியாக வீடுகளில் நடைபெறும் உரையாடல்களை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ ஒட்டுக் கேட்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சி தகவலை...
ரகசிய ஆவணங்களை வெளியிடுவதில் கில்லாடியான இணையதளம் விக்கிலீக்ஸ். இந்த தளமானது தற்போது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பற்றிய தகவல்கள் மற்றும் கோப்புகளை வெளியிட்டுள்ளது. வால்ட் 7 என்ற பெயரில், அமெரிக்க உளவு அமைப்பின் 8,761 கோப்புகளை வெளியிட்டுள்ளது. இனியும் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. மக்களின் மொபைல்போன், ஸ்மார்ட் டிவி, கணினி ஆகியவற்றை எந்தெந்த வழிகளில் எல்லாம் சி.ஐ.ஏ உளவு பார்க்கிறது என்பதனை பக்கம் பக்கமாக விளக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.

அனைத்திலும் உளவு...
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி உங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி, ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் போன்ற அனைத்தையும் சி.ஐ.ஏ.,வால் ஹேக் செய்ய முடியும்; அதுமட்டுமின்றி மக்கள் பாதுகாப்பானது, என்க்ரிப்ட் செய்யப்பட்டது என நினைத்து பயன்படுத்தும் மெசேஜிங் அப்ளிகேஷன்களைக் கூட ஹேக் செய்ய முடியும். உதாரணமாக வீப்பிங் ஏஞ்சல் எனப்படும் சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை உளவு பார்க்கும் டூல் பற்றி விக்கிலீக்ஸ் கூறும்போது, "இந்த டூல் மூலம் சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை பேக் ஆப் என்னும் மோடில் வைக்க முடியும். அதாவது பயனாளர் டிவியை அணைத்தாலும், டிவி அணையாமல் இருக்கும். அப்போது டிவி பக் ஆக செயல்பட்டு, டிவி இருக்கும் அறையில் நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யும். பின்னர் அதனை இணையம் மூலம் சி.ஐ.ஏ சர்வருக்கு அனுப்பும்" என்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago