முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் : கலெக்டர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்;சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தலைமையில் நேற்று(09.03.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருங்காபுரி வட்டம் கரடிப்பட்டியில் இன்று (10.03.2017) ஜல்லிக்கட்டு நடைபெறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கரடிப்பட்டி, இலால்குடி வட்டம் கீழன்பில், மணப்பாறை வட்டம் ஆவாரம்பட்டி, கிராமங்களில் ஜல்லிகட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதால் அனுமதி கேட்டு கிராம மக்கள் விண்ணப்பித்துள்ளனர்.

வருவாய்த்துறை, காவல்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமத்தில் ஆய்வு செய்து அரசு விதிமுறைகள் படி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடத்தும் விழா அமைப்பாளர்கள் ஜல்லிக்கட்டினை திறந்தவெளியில் நடத்திட வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை கால்நடைபாரமரிப்புத் துறையினர் ஆய்வு செய்து தகுதி இல்லா காளைகளை அனுமதிக்க கூடாது. பங்கேற்கும் வீரர்களுக்கு கட்டாயம் மருத்துவப்பரிசோதனை செய்ய வேண்டும். தகுதியில்லாத வீரர்களை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கூடாது. காளைகளை எந்தவகையிலும் துன்புறுத்தக் கூடாது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் விரர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவசர காலங்களில் காளைகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மருத்துவச் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வகையில் வெளியேற அவசர வழியினை (நுஅநசபநnஉல நுஒவை) விழா திடலில் அமைக்கப்பட வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு மாடுகள் அனுப்புமிடம், கால்நடை பதிவு செய்யும் இடம், மாடு பிடிக்கும் இடம், பார்வையாளர்கள் இருப்பிடம், மாடுகள் வெளியே அனுப்பும் இடம், பொதுமக்கள் வந்து செல்லும் இடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் அனைத்து துறை அலுவலர்கள் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள கிராமங்களில் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.கணேஷன், அலுவலக மேலாளர்(குற்றவியல்) சத்தியபாலகங்காதரன், காவல்த்துறை துணை கண்காணிப்பாளர்கள் வனிதா(மணப்பாறை) நடராஜன்(இலால்குடி), வருவாய் கோட்டாட்சியர்கள் ஏஜி.ராஜராஜன்(ஸ்ரீரங்கம்), கோவிந்தராஜுலு(இலால்குடி), வட்டாட்சியர்கள் ராஜேந்திரன்(மணப்பாறை), சிராஜீதின்(மருங்காபுரி) ஜவகர்லால்நேரு(இலால்குடி), கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தும் கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago