முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100 சதவீத கழிவறை குறித்த தெரிவிக்கலாம் : நகராட்சி ஆணையாளர் முரளி தகவல்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      பெரம்பலூர்

பொது இடங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் காலரா போன்ற கொடிய தொற்றுநோய் ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே, அதனை தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளியில் மலம் கழிப்பதை மத்திய அரசு மற்றும் மாநில அரசு தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 100 விழுக்காடு கழிவறைகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று அறிவிக்கப்பட உள்ளதால், பொதுமக்கள் இது தொடர்பான ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகள் ஏதுமிருப்பின் 10 நாட்களுக்குள் நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் அனைத்து பொதுமக்களும் தங்களது வீடுகளிலும், பொது கழிப்பிடங்களிலும் 100 சதவீதம் கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதில்லை என்று அறிவிப்பு செய்ய பெரம்பலூர் நகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நகராட்சியில் அமைந்துள்ள அனைத்து பள்ளி மாணவர்களிடம் படிக்கும் பள்ளிகள் மற்றும் வீடுகளிலும் கழிப்பறையைத்தான் பயன்படுத்தி வருகின்றோம் என்ற உறுதிமொழி பெறப்பட்டுள்ளது. இந்நகரில் இயங்கும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் அவர்களது பகுதியில் வசிக்கும் அனைத்து பொதுமக்கள் கழிப்பறைகளைத்தான் பயன்படுத்தி வருகின்றோம் என்ற உறுதி மொழி கடிதங்களும் பெறப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் நகராட்சி பகுதி முழுவதும் 100மூ பொதுமக்கள் பொதுஇடங்களை திறந்த வெளிகழிப்பிடங்களாக பயன்படுத்துவது இல்லை என அறிவிக்க, முதற்கட்டமாக இந்நகராட்சிக்குட்பட்ட 4,5,6,7,8 ஆகிய 5 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் கழிப்பறைகளை 100மூ சதவீதம் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் திறந்த வெளியிடங்களை கழிப்பிடமாக பயன்படுத்துவதில்லை என்றும் நகராட்சி சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

எனவே பொது மக்கள் இதுகுறித்து தங்களது ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை இன்னும் 10 நாட்களுக்குள் பெரம்பலூர் நகராட்சி ஆணையருக்கு கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்