முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர் அமைப்பினர் சார்பில் ஆலோசனை கூட்டம்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி இளைஞர் களம் சமூக சேவை அமைப்பின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக கும்மிடிப்பூண்டியில் 6 நாள்கள் தொடர் போராட்டம் இருந்த இளைஞர்களின் இளைஞர் களம் என சமூக சேவை அமைப்பின் ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கருவேல மரங்கள் ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் இளைஞர் களம் அமைப்பு கவனம் செலுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், கருவேல மரங்கள் ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் நடுதலை முன்னின்று நடத்துதல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
நிகழ்வில் சமூக சேவகர் விஜயசாரதி, கவிஞர் ரவி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் சிப்காட் தொழிற்பேட்டையால் எதிர்கொள்ளும் மாசு மற்றும் சூழல் சீர்கேடு பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்