முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் அன்னதானம்: முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் அன்னதானத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை ப+வனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் அரசின் அன்னதானத் திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, அன்னதானத் திட்ட விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். முன்னதாக, கோயில் வளாகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ப+ரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதல்வர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயில் மண்டபத்தில் குத்துவிளக்கு ஏற்றினார். அதனைத் தொடர்ந்து, அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்ப+ர் செ.ராஜு, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி, திருநெல்வேலி மண்டல இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் லட்சுமணன், தூத்துக்குடி மாவட்ட இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, இந்து அறநிலையத் துறை உதவி கோட்டப் பொறியாளர் செல்வராஜ், கோயில் நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிமுக பெருநகரகழக செயலாளர் எஸ்.விஜயபாண்டியன், ஒன்றியசெயலாளர் அய்யாத்துரைபாண்டியன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் பொன்ராஜ், மாவட்ட விவசாயஅணி செயலாளர் ராமச்சந்திரன், அம்மாபேரவை ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரபாண்டியன், வண்டாணம் கருப்பசாமி, முன்னாள் வைஸ்சேர்மன் ராமர், அம்பிகா வேல்மணி, நாலாட்டின்புத்தூர் அய்யனுராஜ், பாண்டவர்மங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், அம்மாபேரவை கடலையூர்ரோடு செண்பகமூர்த்தி, மாவட்ட துணைசெயலாளர் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், காந்திநகர் 1வது வார்டு செயலாளர் மாடசாமி, 36வார்டு செயலாளர் வைகுண்டபாண்டியன், மாவட்டபிரதிநிதி பொன்னுச்சாமி, நகர மாணவரணி நகரசெயலாளர் எல்.எஸ்.பாபு, பீவி. சீனிவாசன், அம்மா பேரவை பாலாஜி, அம்மா பேரவை சந்திரசேகர் . இளைஞர் பாசறை பழனிக்குமார், மாதவன், எஸ்.கே.மாயா, சிவகாடு பாலமுருகன், அமைப்புசாரா அணி விஜயக்குமார், டிரைவர் செல்லையா, மாவட்ட இணைசெயலாளர் கலைவாணி கோவிந்தராஜன், நிலவளவங்கி தலைவர் கணபதிபாண்டியன், இயக்குனர் ஜெமினி, புதுகிராமம் ஆரோக்கியராஜீ, எம்ஜீஆர் மன்றம் குருநாதன், ஆ. கணேசன், அம்மாபேரவை சந்திரசேகர், வானரமூட்டி அலங்காரபாண்டியன், வழக்குரைஞர்கள் சங்கர்கணேஷ், விஜயபாஸ்கர் 28வது வார்டு செயலாளர் மாரிச்சாமி, 29வது வார்டு நகர கூட்டுறவு வங்கி கடன்சங்கதலைவர் மாரியப்பன், கூட்டுறவு பால்சொஸைட்டி தலைவர் வெள்ளத்துரை, பெரியசாமி பாண்டியன், ஆபிரகாம்அய்யாத்துரை, கேண்டீன்நைனா,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பின்னர், கோயில் முன்புறம் ரூ.1கோடியே40லட்சம் செலவில் புதிதாக 15  அடி கருங்கல்லில் 36 அடி சுதைவேலைப்பாடு கொண்ட கதிர்வேல் முருகன் சிலையின் மாதிரி வரைபடத்தைப் பார்வையிட்ட முதல்வர், அந்த சிலை வைக்கப்படவுள்ள இடத்தையும் கேட்டறிந்தார். பின்னர் இதற்கான பணிகள் செய்வது குறித்து முறையாக அனுமதி பெற்று விரைந்து பணியை தொடங்க அறிவுறுத்தினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்