Idhayam Matrimony

நீலகிரியில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

                                 அம்மா திட்டம்

நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்டம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதியோர் ஓய்வூதியத்தொகை, விதவை உதவித்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, புதிய உழவர் அட்டை, வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் வருமான சான்று, சாதி சான்று, விதவை சான்று மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பெயர்சேர்த்தல், நீக்குதல் போன்ற மக்கள் நல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, மின்வாரியம் மற்றும் வளர்ச்சித்துறை சார்ந்த குறைகள் கேட்டு குறை நிவர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

                                        மார்ச் 2_வது வெள்ளிக்கிழமை

இத்திட்டமானது மார்ச் 2_வது வெள்ளிக்கிழமையான இன்று(10_ந் தேதி) ஊட்டி வட்டத்தில் சின்னகுன்னூர் சமுதாய கூடம், குன்னூர் வட்டத்தில் பிரகாசபுரம் சமுதாய கூடம், கோத்தகிரி ஓம்நகர் சமுதாய கூடம், குந்தா வட்டத்தில் கரிகல்வளை சமுதாய கூடம், கூடலூர் வட்டத்தில் கீழ்நாடுகாணி அண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,  பந்தலூர் வட்டத்தில் விலங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. எனவே இப்பகுதி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு மாவட்டகலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்