முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலர்தீவன விற்பனை நிலையத்தின் விற்பனையை அமைச்சர் .கே.டி.இராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் -விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள உலர்தீவன விற்பனை நிலையத்தின் வைக்கோல் விற்பனையை   பால் வளத்துறை அமைச்சர்  .கே.டி.இராஜேந்திரபாலாஜி  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,  தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வைத்தார்கள்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைபொய்த்து போன காரணத்தினால், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்படாதவண்ணம் கால்நடை வளர்ப்போர்களுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சிவகாசி, வெம்பக்கோட்டை,சாத்தூர், விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 9 வட்டங்களிலும் தலா ரூ.18.27 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர்தீவன வழங்க விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.164.43 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக திருவில்லிபுத்தூர் கால்நடை மருந்துவமனையில் உலர்தீவன விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் ஒரு கிலோ வைக்கோல் ரூ.2 க்கு விற்பனை செய்யப்படும். ஒரு கால்நடைக்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வீதம் ஒரு விவசாயிக்கு 5 கால்நடைகளுக்கு ஒரு வாரத்திற்கு 105 கிலோ வரை உலர் தீவனம் பெற்றுக்கொள்ளலாம். விற்பனைக்கான உலர் தீவனங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் அமைக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் பதிவு செய்து பயனடையலாம். மீதமுள்ள 8 வட்டங்களிலும் உலர்தீவன விற்பனை நிலையங்கள் விரைந்து அமைக்கப்பட்டு செயல்பட உள்ளன.

இவ்விழாவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்  டி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள்  எஸ்.ஜி.சுப்பிரமணியன், திருமதி.எம்.சந்திரபிரபா, மண்டல இணை இயக்குநர்(கால்நடை பராமரிப்பு) மரு.சுகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்