முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக நீடிப்பு

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேஸ்வரம் -இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவரின் சாவுக்கு தகுந்த நியாயம் கிடைக்கவேண்டும் எனக் கோரி ராமேசுவரம் அரசு மருத்து மனையில் உள்ள மீனவரின் உடலை வாங்காமல் மூன்றாவது நாளாக குடும்பத்தினரும்,உறவினர்களும்,மீனவர்களும் மறுத்து வருகிறார்கள் .
 ராமேசுவரம் அருகே உள்ள மீனவரின் சொந்த பகுதியான தங்கச்சிமடம் பகுதியில் தொடர்ந்து மீனவர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.
மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடந்த திங்கள் கிழமை மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் கெம்லஸ் மகன் பிரிட்ஜோ வின்(21) மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதையடுத்து பிரிட்ஜோ வின் உடல் ராமேசுவரம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மீனவர் பிரிட்ஜோ வின் சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரையும்,துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை வீரர் மீது வழக்கு தொடரும் வரையும்,, இது போன்ற இன்னொரு மீனவனுக்கு இந்த நிகழ்வுகள் நேரிட கூடாது எனவும் அதற்கு மத்திய அரசு பிரதிநிதிகள் நேரடியாக போராட்ட களத்தில் வந்து மீனவர்களிடம் உறுதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரிட்ஜோவின் தந்தை கெம்ப்ளஸ்,தாய் பெர்மத்மேரி மற்றும் உறவினர்கள் மீனவரின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் உயிரிழந்த மீனவர் பிர்ட்ஜோ வின் சொந்த பகுதியான தங்கச்சிமடத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது.இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு ஆதரவு அளித்து வருகின்றனர்.
போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் பிரமுகர்கள்
இந்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று  நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை வடமராச்சி மீனவ சங்கதலைவர் ஜஸ்டின்,மன்னார் பகுதி மீனவ சங்க தலைவர் மகேஷ்,திரைப்பட இயக்குநர் களஞ்சியம், மீனவ மக்கள் முன்னனி தலைவர் நாக்ஸ்பெர்னான்,சென்னை மெரினா போராட்டக்குழு தலைவர் ரவி, மலேசியா நாட்டை சேர்ந்த உலக பன்னாட்டு தமிழ் மன்ற அமைப்பாளர் சேதுராமன்,மலேசியா தும்கு அப்துல்ரகுமான் பல்கலைகழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன்,கரூர் சிகரம் அறக்கட்டளை நிர்வாகிகள்,கோவை வ.உ.சி ஜல்லிக்கட்டு மைதானம் போராட்டக்குழுவினர்கள், அலாங்கா நல்லூர் காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகி ராஜேஸ்வரி,தமிழ் இன போராளி முகிலன்,கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் மற்றும் தமிழக கடலோரமாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்