முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பகுதிகளில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.- மதுரை மாநகராட்சி தமுக்கம் மைதான சாலையில் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி துணை ஆணையாளர்  .செ.சாந்தி  தலைமையில் காவல் துணை ஆணையாளர் (சட்டம் ஒழுங்கு) மரு.அருண், இ.கா.ப. அவர்கள்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் 3.65 லட்சம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை சுமார் 1.80 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது. ஒரே தடுப்பூசியில் இரண்டு உயிர்க்கொல்லி நோய்களான தட்டம்மை மற்றும் ரூபெல்லாவிலிருந்து வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது. சமூக வலைதளங்களில் பரவும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். இதுவரை தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுகிறது. இந்த பேரணியில் விக்ரம் நர்சிங் கல்லூரி, மகாத்மா நர்சிங் கல்லூரி, வடமலையான் நர்சிங் கல்லூரி, செல்லமுத்து அறக்கட்டளை உள்ளிட்ட 300 நர்சிங்க கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி தமுக்கம் மைதானம் முதல் அரசு இராசாசி மருத்துவமனை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். அனைத்து பெற்றோர்களும் அவர்களது 9 மாதம் நிரம்பிய குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த பேரணியில் துணை ஆணையாளர்  செ.சாந்தி, நகர்நல அலுவலர் மரு.சதீஸ்ராகவன், உதவி நகர்நல அலுவலர் மரு.பார்த்திப்பன், பூச்சியியல் வல்லுனர்  வரதராஜன், சுகாதார அலுவலர்கள்  ராஜ்கண்ணன்,  நாகராஜ், சுகாதார ஆய்வாளர்  வெங்கடசாமி உட்பட நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago