முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய என்ஜினீயர் கொல்லப்பட்ட வழக்கு: அமெரிக்க கடற்படைவீரர் கோர்ட்டில் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

ஹூஸ்டன்   - அமெரிக்காவில் இந்திய என்ஜினீயர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

சுட்டுக்கொலை
தெலுங்கானாவைச் சேர்ந்த என்ஜினீயர் சீனிவாஸ் குச்சி போத்லா (32). அமெரிக்காவின் கன்சாசில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் ஆடம் புரின்டான் (51) என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இச்சம்பவத்தில் மற்றொரு இந்தியர் அலோக் மதசானியும், தடுக்க முயன்ற அமெரிக்கரும் காயம் அடைந்தனர். நாட்டை விட்டு வெளியேறுங்கள் என கூறி இனவெறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோர்ட்டில் ஆஜர்
மேலும் கொலையாளி புரின்டான் மீது கொலை வழக்கும், குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்சாஸ் கோர்ட்டில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அதை தொடர்ந்து வழக்கை வருகிற மே 9-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்