முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்பள உயர்வு கேட்டு பெர்லின் விமான நிலைய பணியாளர்கள் வேலை நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

பெர்லின் - ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகர விமான நிலைய பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் அனைத்து விமான சேவைகளும் முடங்கிப்போய் ஸ்தம்பித்துள்ளது.

சங்கம் கோரிக்கை
பெர்லின் மற்றும் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலைய பணியாளர்களுக்கு ஒருமணி நேர சம்பளமாக 11 யூரோக்கள் அளிக்கப்படுகிறது. இந்த சம்பளத்தை 12 யூரோக்களாக (ஒரு யூரோ என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 70 ரூபாய்) உயர்த்தி அளிக்க வேண்டும் என பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சேவை முடங்கியது
இந்த கோரிக்கைக்கு விமான நிலைய நிர்வாகம் செவி சாய்க்காததால் (உள்ளூர் நேரப்படி) நேற்று அதிகாலை 4 மணியில் இருந்து 25 மணி நேர வேலை நிறுத்தத்தில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெர்லின் நகரில் உள்ள டேகெல், ஸ்கோயெனேஃபெல்ட் ஆகிய இரு விமான நிலையங்களிலும் விமானச் சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் பெர்லின், லுப்தான்சா, ஈசி ஜெட், ரியான் ஏர் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான நிலைய பணியாளர்கள் 25 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்