முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

 

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து நேர்ச்சை செலுத்தினர். திருச்செந்தூரில் மாசி திருவிழா கடந்த 1-ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வுpழா நாட்களில் தினசரி காலை, மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. காலை 6.35 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 7.05 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது, தொடர்ந்து காலை 7.15 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக பக்தர்கள் அரோகரா கோஷம் ஒலிக்க வலம் வந்து காலை 8.50 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. அதன்பின் காலை 9.00 மணிக்கு தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காலை 10.15 மணிக்கு நிலைக்கு வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் திருக்கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன், இணை ஆணையர் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன்;, செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், மணியம் ரமேஷ், தொழிலதிபர்கள் கண்ணன் ஆதித்தன், கதிரேச ஆதித்தன், திருக்கோவில் பணியாளர்கள் பிச்சையா, வெங்கடேஷ், சிவா, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், பாஜ மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், அனுமன் சேனா இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ரவிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர், ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இன்று பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் கோட்டைமணிகண்டன், இணைஆணையர் வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்