முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசி காசிவிசுவநாதர் கோவில் மாசி மகப்பெருவிழா தேரோட்டம்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் மாசி மகப் பெருவிழா தேரோட்டம் சிறப்பாக நடந்தது.நெல்லை மாவட்டம் தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவிலில் கடந்த 2ம் தேதி மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் காலை, இரவில் சிறப்பு அலங்கார சப்பர பவனி, சமய சொற்பொழிவு, சிறப்பு கலை நிகழ்ச்சி, இரவு மண்டகப்படிதாரர் தீபாராதனை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடந்தது. விழாவின் 9ம் நாள் தேரோட்டம் நடந்தது.காலையில் விநாயகர், பாலமுருகன் மற்றும் காசிவிசுவநாதர் கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியன் ஆகியோர் சப்பர பவனி வந்தனர். தேர் செல்லும் பாதையை சரிபார்க்கும் நிகழ்ச்சியாக இது நடந்தது. இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேர்களுக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நடந்தது. முதலில் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது மேள தாளம், முரசு முழங்கின. சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களை இசைத்தனர். திரளான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி நிலை வந்து சேர்ந்தது.இதன் பின்னர் அம்பாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடியே தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் நான்கு ரதவீதிகளிலும் உலா வந்து நிலை வந்து சேர்ந்தது. இதன் பின்னர் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின் சுவாமி, அம்பாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளினர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிசேக, அலங்கார தீபாராதனை, பக்தி சொற்பொழிவு, மண்டகப்படிதாரர் தீபாராதனை, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நீர் மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினர். தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்