முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்புழுதியூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகவிழா

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      வேலூர்
செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தில் புராதனமான முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலும், ஆவணி மாதம் மூன்றாம் வெள்ளிகிழமை தொடங்கி 10நாட்கள் நடைபெறுகிற சங்குத் திருவிழாவும் புராதனமானவை இத்திருக்கோயிலில் சுமார் ரூ.25லட்சம் செலவில் புதியதாக 3நிலை கொண்ட 45அடி உயர ராஜகோபுரமும் உட்பற கருவறையின் மீது 21அடி உயர விமான கோபுரமும் கட்டி ரூ.5லட்சம் மதிப்பில் கொடி மரமும் புதியதாக மண்டகொலத்தூர் ஏழுமலை ஸ்தாபதி மூலம் நிறுவப்பட்டு ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீ லட்சுமி, நவகிரகம், சிவலிங்கம் உள்ளிட்ட பரிவார தேவதைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 2நாள் நடந்த நிகழ்ச்சியில் கலச ஸ்தாபனம் வாஸது சாந்தி பிரவேசபலி கோபூஜை கணபதி ஹோமம் நவகிரக ஹோமம், இரண்டு காலயாக பூஜை அஷ்டபந்தனம் சாத்துதல் போன்ற பல்வேறு சடங்குகள் நடத்தி கும்பாபிஷேகத்தை செங்கம் சீத்தாராமன் தலைமையில் ஆகியோர் கலந்துகொண்டு குழுவின் வேதமந்திரம் ஓதி நடத்தினர் விழாவில் மு.பே.கரி எம்எல்எ செங்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாகரன் வட்டார வளர்;ச்சி அலுவலர் சக்திவேல் புதுப்பாளையம் ஒன்றிய குழு துணைத்தலைவர் சீனுவாசன் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் மாதவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 1000 கணக்கான பக்தர்கள் பெண்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திருவீதி உலா மின் அலங்காரத்துடன் மேளத்தாளத்துடன் வானவேடிக்கையடன் நடந்தது. விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் பாபு ரெட்டியார் துரைசாமி ரெட்டியார் குணசேகரன் மற்றும் உபயதாரர்கள் கிராமபொதுமக்கள் ஏற்பாடு செய்து நடத்தினர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago