ஜெயங்கொண்ட பட்டினம் அரசு பள்ளியில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ ஆய்வு

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      கடலூர்
cdm admk-4

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட குமராட்சி ஒன்றியம் ஜெயங்கொண்டபட்டினம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தலைமை ஆசிரியர் மதி அவர்களிடன் பள்ளியின் பயிலும் மாணவ மாணவியர்களின் கல்வி தரத்தினை கேட்டறிந்தார். பிறகு ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடினார். பின்பு பள்ளிக்கு ரூ.1.62 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டிடத்தினை பார்வையிட்டார். பின் ஒப்பந்தகாரரிடம் பணிகளை தரமாகவும் அதே வேளையில் விரைந்து செய்து முடித்து வருகின்ற கல்வியாண்டில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.ஆய்வின் போது உடன் குமராட்சி ஒன்றிய கழக அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக அவைத்தலைவர் கோவி.ராசாங்கம், மாவட்ட பிரதிநிதி செல்வகணபதி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் முருகையன், மு.ஒன்றிய பொருளாளர் முத்துக்குமரன், ஊராட்சி செயலாளர் இரவி, கிளை செயலலர்கள் ராமர், ஸ்ரீகாந்த், நிர்வாகிகள் கனேஷ், சுந்தரம், கார்த்திகேயன், ஜே.கே.முத்து, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: