முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக  கூட்டரங்கில், ஊரக உள்ளாட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊரக உள்ளாட்சி பகுதிகளில்  பொது மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவது தொடர்பாகவும், வருகின்ற கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து அலுவலர்களும் துரிதமான முறையில் பணிகளை மேற்கொள்ளவும்,  பழுதடைந்த  ஆழ்துளை கிணறுகளை சரி செய்யவும் மற்றும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்  எனவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில்,  ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) க.சங்கமித்திரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சிப்பிரிவு) (பொ) -  இரா. கோவிந்தன், உதவி இயக்குநர் நிலையிலான மண்டல அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)கள், செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையினர்  ஆகியோர்  கலந்து  கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்