முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தகிரி பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பண்ணைப் பள்ளியின் செயல்முறைகள்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      நீலகிரி

கோத்தகிரி பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் பண்ணைப்பள்ளியின் செயல்முறைகளை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் செய்தியாளர் பயணத்தின் போது பார்வையிட்டார்.

                                    21 லட்சம் மானியம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட கதகட்டி கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளியின் செயல்முறைகளையும், நெடுகுளா மற்றும் கூக்கல் வருவாய் கிராமங்களில் தோட்டக்கலைத்துறையின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் கீழ் சுமார் 21 லட்சம் மானியத்திலான பசுமைகுடில்களையும், ரூ.2 லட்சம் மானியத்திலான கார்னேசன் மலர்களை சிப்பம் கட்டும் அறையினையும் செய்தியாளர் பயனத்தின் போது மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

                                  காய்கறி உற்பத்தி அதிகரிப்பு

நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். அதனை கருத்திற்கொண்டு வேளாண் தொழிலை மேம்படுத்துவதையும், விவசாயிகளின் நலனை காக்க வேண்டுமென்பதையும் தமது கடமையாகக் கொண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மாவின் ஆசியுடன் தமிழக அரசு முழு முயற்சியுடன் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார நிலை என்பது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்களையே சார்ந்து அமைந்துள்ளது. தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்கு தோட்டக்கலைத்துறையின் மூலமாக பல்வேறு மானிய திட்டங்கள் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக காய்கறி மற்றும் மலர்கள் உற்பத்தியை அதிகளவில் ஊக்குவிக்கும் திட்டங்கள் வாயிலாக காய்கறிகளின் உற்பத்தி திறன் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மலர்கள் உற்பத்தி பரப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

                                     25 ஏக்கரில் முட்டைக்கோஸ்

விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மலைப்பகுதி, சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்பகுதிகளில் தோட்டக்கலைத்துறை சார்பில் 25 ஏக்கர் பரப்பளவில் முட்டைக்கோஸ் சாகுபடியில் உண்டாகும் முக்கிய தீமை விளைவிக்கும் பூச்சிகளான வைர முதுகு பூச்சியினை கட்டுப்படுத்த வேளாண் சுற்றுச்சூழல் ஆய்வு தொழில்நுட்பத்தின் கீழ் செண்டுமல்லி மற்றும் கடுகு செடிகள் வரப்பு ஓரங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விளக்குப்பொறிகள், இனக்கவர்ச்சிப் பொறிகள் மற்றும் மஞ்சள் அட்டை ஒட்டும்  பொறிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த செய்தியாளர் பயணத்தின் போது தோட்டக்கலை இணை இயக்குநர் ந.மணி மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்