முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசாரிடம் சிக்காமல் இருக்க பாகிஸ்தானில் குறுந்தகவலை அனுப்ப செயலியை பயன்படுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள் !

சனிக்கிழமை, 11 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பாகிஸ்தானில் போலீசாரிடம் சிக்காமல் தகவல் பரிமாற்றம் செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் வழக்கமான முறைகளை தவிர்த்து குறுந்தகவல் செயலியை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

டெலிகிராம் குறுந்தகவல்
அதன் படி ஐ.எஸ். தீவிரவாதிகள் டெலிகிராம் எனும் குறுந்தகவல் செயலியை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. வழக்கமான மொபைல் போன் பயன்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் அவர்களுக்கு சாதகமான, ரகசிய தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடிவதாக கூறப்படுகிறது. இந்த வழிமுறை வெற்றிகரமானதாக இருப்பது தெரியவந்துள்ளது என பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தானாக அழிந்து விடும்
டெலிகிராம் செயலி தீவீரவாதிகளுக்கு அதிக பயன் தரும் வகையில் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் குறுந்தகவல்கள் தானாக அழிந்து விடும் என்பதே ஆகும். ஒருமுறை வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதும், இந்த தகவல் எவ்வித தடையமும் இன்றி தானாக அழிந்து விடும்.

பின்னடைவு
நேரடியாக தகவல்களை பரிமாற்றி கொள்வதை அடுத்து மிகவும் வெற்றிகரமான தகவல் பரிமாற்ற முறையை இந்த செயலி வழங்கி இருப்பதாக அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த செயலியை இடைமறிக்கும் தொழில்நுட்பம் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் இல்லாதது போலீசாருக்கு பின்னடைவாக உள்ளது.  ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பாகிஸ்தான் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த அமைப்பு சார்பில் பல்வேறு தாக்குதல்கள் பாகிஸ்தானிலும் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago