முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபெல்லா தடுப்பூசி முகாம் வரும் 15_ந் தேதி நிறைவு

சனிக்கிழமை, 11 மார்ச் 2017      நீலகிரி

ரூபெல்லா தடுப்பூசி முகாம் வரும் 15_ந் தேதியுடன் முடிவடைய உள்ளதால் விடுபட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

                                1,41,531 குழந்தைகள்

இந்தியாவில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி திட்டம் தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கடந்த மாதம் 6_ந் தேதி முதல் வரும் 13_ந் தேதி வரை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 1,41,531 குழந்தைகளுக்கு பாதுகாப்பான தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டு இதுநாள் வரையில் 1,20,000 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே பூனே நகரில் தயாரிக்கப்பட்ட இத்தடுப்பூசியானது அனைத்து பள்ளிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் வரும் 15_ந் தேதி வரை எல்லா நாட்களிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

                 15_ந் தேதி முகாம் நிறைவு

இத்திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்கு மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இத்திட்டத்தில் தொடர்புடைய அனைவரும் இத்தடுப்பூசி திட்டத்தினை திறம்பட செயல்படுத்தி வருகின்றனர். இத்தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியினால் எவ்வித பாதிப்பும் உண்டாகவில்லை. உங்கள் குழந்தைகளையும் மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா நோயிலிருந்து பாதுகாக்க அவசியம் இத்தடுப்பூசியினை இந்த தருணத்தில் குழந்தைகளுக்கு இடவேண்டும். எனவே இந்த சிறப்பு முகாம் வரும் 15_ந் தேதி முடிவடைவதால் விடுபட்டு போன குழந்தைகள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்