முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம் , உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 470 பயனாளிகளுக்கு 30.61 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

சனிக்கிழமை, 11 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 470 பயனாளிகளுக்கு ரூ.30.61 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   தலைமையில்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்                     உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  வழங்கினார்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  பேசியதாவது 

மறைந்தும், மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து வரும் மறைந்த   தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசு, தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும்  முன்னேற்றத்திற்காக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேளாண் பெருமக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த  அம்மா அவர்களின் அரசு பருவமழை பொய்த்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் வறட்சியான சூழல் உருவானது.  விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக நமது மாவட்டத்தில் ரூ.135 கோடி நிதியினை வழங்கியுள்ளது.  மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மறைந்த  தமிழக முதலமைச்சர் அம்மா  ஏழை, எளியோர் வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் ரூ.2.10 இலட்சம் முழு மானியத்துடன் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார்கள்.  அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் சுமார் 15,000 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.  மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை தனது வாழ்நாள் முழுவதுமாய் கொண்டிருந்த மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா  ஏழை எளியோர் இல்லாத நிலை இருக்க வேண்டும் என்பதற்காகவே சிறப்புமிக்க திட்டங்களை தாய் உள்ளத்தோடு வழங்கி உள்ளார்கள்.  மறைந்த  அம்மா அவர்களின் கனவுத் திட்டமான விஷன் 2023-க்குள் தமிழகத்தில் அனைவருக்கும் சிறப்பான முறையில் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும். தமிழக மக்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படும் என  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  பேசினார்கள். 

இன்றைய விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.3,00,000/- மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 36 பயனாளிகளுக்கு  ரூ.4,32,000/- மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையினையும், 6 பயனாளிகளுக்கு ரூ.72,000/- மதிப்பில் விதவை உதவித்தொகையினையும், 40 பயனாளிகளுக்கு ரூ.4,80,000/- மதிப்பில் முதியோர் உதவித்தொகையினையும், 19 பயனாளிகளுக்கு பழங்குடியினருக்கான சாதிச்சான்றிதழ்களும், 17 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்களும், 6 பயனாளிகளுக்கு விதவைச் சான்றிதழ்களும்,                                  2 பயனாளிகளுக்கு ஆண் வாரிசு இல்லை என சான்றிதழ்களும்,  வட்ட வழங்கல் துறையின் சார்பில் 334 பயனாளிகளுக்கு ரூ.16,70,000/- மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.51,196/- மதிப்பில் வேளாண்மை உபகரணங்களும் மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.56,100/- மதிப்பில் தோட்டக்கலை உபகரணங்களும் என 470 பயனாளிகளுக்கு ரூ.30,61,296/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  வழங்கினார்கள்.

முன்னதாக, வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனைகளை விளக்கிடும் புகைப்படக் கண்காட்சியினையும்  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  பார்வையிட்டார்கள்.

       இந்நிகழ்வின்போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் சாதனைக்குறள், தனித்துணை கலெக்டர்கள், உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் தயானந்தன்,  அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்  உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்