முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாநகராட்சியில் சுற்றிய பன்றிகள் வெளியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த பன்றிகள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் சமீபகாலமாக பன்றிக்காய்ச்சல் பீதி அதிகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சியின் குறிப்பிட்ட சில இடங்களில் பன்றிகளை சிலர் சுயலாபத்திற்காக வளர்த்து வருகின்றனர். இதனைத் தடுக்க மாநகராட்சி சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் பன்றிகள் நடமாட்டம் குறையவில்லை. எனவே மாநகராட்சி ஆணையாளர் மனோகர் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் அனிதா தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனையிடப்பட்டது. சந்தை ரோடு, மேட்டுப்பட்டி, அய்யன்குளம் ஆகிய  பகுதிகளில் சோதனை நடத்தி 10 பன்றிகளை பிடித்து நகர எல்லைக்கு வெளியே கொண்டு விட்டனர். இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்