முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்தானம் - அமோரா தஸ்தர் நடிக்கும் “ஓடி ஓடி உழைக்கனும்“

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் “ எங்க மங் சங் “ படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.

தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும்தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமோரா தஸ்தர் நடிக்கிறார். மற்றும் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - கோபிநாத் / இசை - ஜிப்ரான் / கலை - வனராஜ் ஸ்டன்ட் - சில்வா / எடிட்டிங் - ராமாராவ் தயாரிப்பு நிர்வாகம் - மகேஷ் தயாரிப்பு மேற்பார்வை - பாலகோபிமக்கள் தொடர்பு - மௌனம்ரவி தயாரிப்பு - கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்கதை, திரைக்கதை, வசனம் - ஞானகிரி இயக்கம் - கே.எஸ்.மணிகண்டன். படத்தின் படிப்பிடிப்பு விறு விருப்பாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி வருகிறது. போலீஸ் வேடத்தில் சந்தானம் கலக்க இருக்கிறார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago