முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாமில் 353 குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில் தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி கடந்த 06.02.2017 முதல் 15.03.2017 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 22,878 குழந்தைகள் உள்ளனர். இதில் 11.03.2017 வரை 12,884 குழந்தைகளுக்க போடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் பக்க விளைவுகளோ பாதிப்போ ஏற்படாது மிகவும் பாதுகாப்பானது எனவே பெற்றோர்கள் அச்சமின்றி தங்கள் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், பெற்றோர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (12.03.2017) சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை சுகாதாரப்பணிகளுக்கான துணை இயக்குநர் மரு.சம்பத் துவக்கி வைத்தார். இம்முகாமின் 353 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் இந்த தடுப்பூசி முகாம் 15.03.2017 வரை நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் நகராட்சிக்குட்பட்ட அரசு நகர்புற சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளிலும் நடைபெற உள்ளது.

இந்த தடுப்பூசி முகாமில் வட்டார மருத்துவ அலுவலர், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மரு.அரவிந்தன், உள்ளிட்ட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago