முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி 33வதுஆண்டு விழா: அமைச்சர் கடம்பூர்ராஜூ பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

நேஷனல் பொறியியல் கல்லூரி;;யின் 33வது ஆண்டு விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. நேஷனல் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் கல்வித்தந்தை மு.இராமசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குநர் கே.என்.கே.எஸ்.கே.சொக்கலிங்கம் மற்றும் கல்லூரியின் முதல்வர் எஸ்.சண்முகவேல்; முன்னிலை வகித்தனர். சென்னை காக்னிசன்ட் டெக்னோ சொல்யுசன்ஸ் நிறுவனத்தின் முதுநிலை திட்ட இயக்குநர் நாகராஜன் எஸ் கந்தசாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை இனிதே துவக்கி வைத்தார். அமைச்சர் கடம்பூர் ராஜு, மரியாதை விருந்தினராகவும், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துனைவேந்தர் மு. பாஸ்கர் சிறப்பு விருந்தினராகவும் இவ்விழாவில் பங்கேற்றனர். இவ்விழாவிற்கு வருகைதந்திருந்தோரை கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்புத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியை சென்பகவள்ளி வரவேற்றார்.2016 - 2017 கல்வியாண்டின் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் சமர்ப்பித்தார். அவர் தமது ஆண்டறிக்கையில், மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களிலிருந்து நிதி உதவி பெறப்பட்டு சர்வதேச கருத்தரங்கம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் மாணவர்கள் பயன்பெரும் வகையில் கல்லூரி சார்பில் சிறப்புடன் நடத்தப்பட்டன என குறிப்பிட்டார். மேலும் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களில் 200 பேர் வளாகத் தேர்வு மூலம் டிசிஎஸ், சிடிஎஸ், இன்போசிஸ், ஜோஹோ, சொலார்டிஸ், சம்டு சாப்ட்வெர்ஸ் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும், மேலும் பல நிறுவனங்கள் வளாகத் தேர்வு நடத்துவதற்காக இக்கல்லூரிக்கு வருகை தர உள்ளனர் என்றும் தெரிவித்தார்.தலைமை விருந்தினர் அவர்களை கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் ஸ்ரீனிவாசகன் அவையோருக்கு அறிமுகப்படுத்தினார்.தலைமை விருந்தினர் தமது உரையில் கூட்டு முயற்சி, நேர்மறையான அணுகுமுறை ஆகியவை வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துரைத்தார் மேலும் மாணவர்கள் மூன்றாம் ஆண்டு பயிலும் போதே வேலை வாய்ப்புக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் தங்களது கேள்வி கேட்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மாணவர்கள் தங்களது துறை சார்ந்த ஆழ்ந்த அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற முயல வேண்டும் என்று குறிப்பிட்டார். விழாவில் காலம் சென்ற பேராசிரியர் கண்ணப்பன் கல்லூரிக்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூறும் விதமாக கடந்த 8 வருடங்களாக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் "பேராசிரியர் கண்ணப்பன் நினைவு கல்வி ஊக்கத்தொகை" திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்புத் துறையைச் சார்ந்த மாணவி சு. கிருஷ்ணவேணியின் மூன்று ஆண்டுகளுக்கான கல்விச் செலவுகள் அனைத்தையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றது. அதற்கான சான்றிதழினை மாணவி;, கல்லூரியின் நிறுவனர் கல்வித்தந்தை திரு மு.இராமசாமி அவர்களிடமிருந்து விழா மேடையில் பெற்றுக்கொண்டார்.கல்லூரியின் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து பொறியியல் துறைகளிலும் முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பருவத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் ஆண்டு முழுவதும் கல்லூரிக்குத் தவறாமல் வருகை புரிந்து நூறு சதவீத வருகைப்பதிவுடன் சிறப்பாகக் கல்வி கற்ற மாணவ, மாணவிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி), நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்), ரோட்டராக்ட், செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகளில் தன்னலமற்றுப் பணியாற்றிய சிறந்த மாணவ, மாணவிகள் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 2016 - 2017 கல்வியாண்டின் சிறந்த மாணவருக்கான விருதினை இயந்திரவியல் துறைiயைச் சார்ந்த இறுதியாண்டு மாணவர் செல்வன் P. ஹரிகமல்; பெற்றார். சிறந்த மாணவிக்கான விருதினை கணிப்பொறியியல் துறையைச் சார்ந்த இறுதியாண்டு மாணவி செல்வி து.ஸ்ரீலேகா லட்சுமி பெற்றார். மேலும் மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் கல்லூரி பேராசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.இவ்விழாவில் கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கண்ணப்பன், இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், பேராசிரியர் குப்புசாமி, பொறியாளர் ஜெயபால், தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் சம்பத்குமார், மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனுவியில் துறைத் தலைவர் வில்ஜுஸ் இருதயராஜன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. வுpழாவின் சிறப்பு ஏற்பாடுகளை இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரின் ஆலோசனைப்படி கல்லூரியின் கணிப்பொறித் துறைத் தலைவர் டீ.பரமசிவன்; அவர்களின் ஒருங்கிணைப்பில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் அலுவலர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்