முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவாழ்வு திட்டம் சார்பில் பட்டரைபெரும்புதூரில் மகளிர் தினவிழா

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      திருவள்ளூர்

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின்கீழ் இயங்கும் புதுவாழ்வு திட்டம் சார்பில் பூண்டி ஒன்றியம் பட்டரைபெரும்புதூர், பூண்டி ஊராட்சிகளில் பகுதி குழுக்கள் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா திருவள்ளுரில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புதுவாழ்வு திட்ட அணித்தலைவர் ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார்.பகுதி ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.உதவி திட்ட மேலாளர்கள் முத்துகிருஷ்ணன்,முனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவாழ்வு திட்ட திருவள்ளுர் மாவட்ட மேலாளர் பி.தனசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிராமப்புரங்களில் வறுமை நிலவுகிறது.அதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.தமிழக அரசு சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு கொண்டு செல்கிறது.திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி கொள்ள வேண்டும்.பெண்களிடம் எல்லா திறமைகளும் உள்ளன.பெண்களால் எல்லா துறைகளிலும் சாதிக்க முடியும்,பெண்களுக்கான முன்னேற்றத்தை வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும் என சிறப்புரையாற்றினார்.நிகழ்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா,அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொன்னேரி)அனுரத்னா,புதுவாழ்வு திட்ட அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்