முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் அமைந்துள்ள அரசு விதைப்ண்ணையை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பொங்கலூரில் அமைந்துள்ள அரசு விதைப் பண்ணையை மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி,   நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் தேவணம்பாளையத்தில் அரசு விதைபண்ணை 06.10.1956 அன்று ஆரம்பிக்கப்பட்டது பண்ணையின் மொத்த பரப்பளவு 39.05  ஏக்கர் ஆகும். இதில் தற்போது 33.05 ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது மீதமுள்ள 5.10 ஏக்கர் பரப்பில் கட்டடங்கள் மற்றும் சாலைகள் உள்ளது. அரசு விதைப் பண்ணையில் மக்காச்சோளம்,  சோளம், பயிர் வகைகள்,  எண்ணெய் வித்துக்கள் மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களில் விதை உற்பத்தி செய்யப்பட்டு தரமான ஆதாரநிலை விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரசு விதைப்பண்ணையில்  3.00 ஏக்கர் பரப்பில் எண்ணெய்பனை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  மாநிலத்திலேயே  பொங்கலூர் அரசு விதைப்பண்ணையில் மட்டுமே  வீரிய  ஒட்டு ரக மக்காச்சோள விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும்  அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும்  வேளாண்  ஆராய்ச்சி நிலையங்களுக்கு மாதிரி திடல் அமைத்திட விநியோகிக்கப்பட்டு வருகிறது.  

மேலும், தற்போது நிலவும் வறட்சி சூழ்நிலைகள்  காரணமாக கால்நடைகளுக்கு குறுகிய காலத்தில் தீவனம் உற்பத்தி செய்து வழங்க நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேளாண்மைத்துறை மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை ஆகிய துறைகள் இணைந்து கால்நடைகளின் தீவனத்திற்காக மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் தாவரங்களை வளர்க்கும்  ஹைட்ரோபோனிக் என்ற புதிய முறையில்  மக்காச்சோளம் தீவனம் உற்பத்தி செய்தல் மற்றும் அசோலா தீவனம் உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த முறையில் 10 நாட்களில் ஒரு கிலோ மக்காச்சோள விதையிலிருந்து 10 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம். இம்முறையில் பொங்கலூர் அரசு விதைப்பண்ணையில் தீவனம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்தீவனங்கள் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இத்தகைய நவீன உற்பத்தி முறை குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இதனை விவசாயிகள் சிறந்த முறையில் பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்.

இந்நிகழ்வின் வேளாண்மைத் துறை இணைஇயக்குநர் எஸ். ரெங்கநாதன், துணை இயக்குநர் தமிழ்செல்வன்,கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் முருகன், பல்லடம் வட்டாட்சியர் பாஸ்கரன், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்