முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் உலக பெண்கள் தின விழா

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 கொடைக்கானல்-- கொடைக்கானலில் உல பெண்கள் தின விழா நடந்தது.

உலக பெண்கள் தின விழாவினை அடுத்து பெண்கள் மேம்பாடு (றழஅநளெ நுஅpழறநசஅநவெ)என்ற தலைப்பில் 3 நாட்கள் பயிற்சி முகாம் கெர்டைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.
 முன்னதாக சர்வதேச ரோட்டரி இயக்குநர் கரூரைச் சேர்ந்த பாஸ்கரனின் வழிகாட்டுதல் படி இந்த பெண்கள் மேம்பாட்டு பயிற்சி முகாமினை கொடைக்கானல் ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் ராமன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
 முகாமில் சுமார் 250 மாணவிகளுக்கு தையல், எம்ராய்டரி, சாரி பிரிண்டிங், அழகுகலை, யோகா, பின்னல் பயிற்சி, ஆங்கிலப் பேச்சு பயிற்சி, சமையல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சிகளை பயிற்றுநர்கள் மைதிலி, அமிதாசட்டர்ஜி, ஓமனா, ~Pபா நாஸ், நான்சிபிரின்ஸ், அருட்சகோதரி அருள்செல்வி 
 குழுவினர், பீர் முகமது ஆகியோர் பயிற்சிகளை மாணவிகளுக்கு வழங்கினார்.
 3 நாட்கள் நடந்த இந்த பயிற்சியின் நிறைவு விழாவும் உலக பெண்கள் தின விழாவும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்த இரு விழாக்களுக்கும் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் வள்ளி தலைமை தாங்கினார். கொடைக்கானல் ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் ராமன், செயலாளர் ஜஸ்வந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் கீதா, வருங்கால ரோட்டரி சங்க தலைவர் ரோகன்சாமுவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 3நாட்கள் நடந்த பயிற்சியில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்