முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசன கண்மாய்களை சீரமைக்கும் பணிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.5.5கோடி மதிப்பீட்டில் பாசன கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பணிகளை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழகம் முழுவதிலும் உள்ள பாசன கண்மாய்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் பாசனமடைகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைத்திட ஏதுவாக தமிழக அரசு ரூ.100கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டத்தில் 70 பாசன கண்மாய்களை சீரமைத்திடும் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.5.5கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.இதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்களை சீரமைத்திடும் பணிகளின் தொடக்க விழா மாடக்குளம்,கூத்தியார்குண்டு மற்றும் தூம்பக்குளம் கண்மாய் பகுதிகளில் நடைபெற்றது.இதில் திருமங்கலம் தாலுகா கீழக்கோட்டை கிராமம் அருகிலுள்ள தூம்பக்குளம் கண்மாயின் 4.1கி.மீ வரத்துக்கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகளின் தொடக்க விழாவிற்கு மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ.,முன்னிலை வகித்தார்.ஏராளமான பாசனதாரர்கள் பங்கேற்ற இந்த விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: மக்களுக்கு துயரென்றால் ஓடோடி வந்து உதவி செய்திடக்கூடிய ஒரே அரசு அம்மாவின் அரசு தான்.பருவமழை பொய்த்துப் போனதால் வறட்சியின் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதிலும் 32லட்சம் விவசாயிகளுக்கு 2244கோடி நிவாரணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கி சாதனை படைத்தது அம்மாவின் அரசு மட்டும் தான்.வறட்சியால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மானிய விலையில் தீவனங்கள்,குடிநீர் தேவைகளுக்காக 100கோடியில் சிறப்பு திட்டங்கள்,விவசாயகூலித் தொழிலாளர்கள் பாதிக்காதிருப்பதற்காக 100நாள் வேலை 150நாளாக உயர்த்தி பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது 100கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1513இடங்களில் கண்மாய்களை சீரமைக்கும் பணிகள் துவங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் ஆயக்கட்டு பாசனதாரர்களைக் கொண்டு 5.5கோடி மதிப்பீட்டில் கண்மாய்களை சீரமைத்திடும் 70பணிகள் துவங்கப்பட்டுள்ளது.தற்போது பெய்துவரும் கோடைகால மழையின் போது தண்ணீரை சேமிக்கும் வண்ணமாகவும்,நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும் இந்த திட்டம் பெரிதும் பயனளிக்கும்.மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரணநிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரணநிதி போன்ற நிவாரணங்களை வழங்கி தமிழகஅரசு விவசாயிகளையும்,மக்களையும் வறட்சியிலிருந்து நிச்சயம் பாதுகாத்திடும் என்று பேசினார்.

இவ்விழாவில் பொதுப்பணித்துறை குண்டாறு வடிநில மேம்பாடு செயற்பொறியாளர் சிதம்பரம்,உதவி செயற்பொறியாளர் லீலாவதி,உதவி பொறியாளர்கள் குணசேகரன்,ரவிக்குமார்,ராமச்சந்திரன்,உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா,திருமங்கலம் தாசில்தார் மலர்விழி,திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோனாபாய்,நளினாபரமேஸ்வரி,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கியஅணி செயலாளர் திருப்பதி,கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் உலகாணி எம்.கே.மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,ஒன்றிய அவைதலைவர் அன்னக்கொடி,முன்னாள் ஒன்றிய செயலாளர் பாண்டியன் கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,பிச்சைமணி,சாமிநாதன்,முத்துராஜா,சஞ்சய்காந்தி,வெங்கடேஸ்வரன்,வேம்புவேந்தன்,வேல்ராமகிருஷ்ணன்,வெங்கிடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் உலகாணி.இ.பிச்சை,மதுரை சுந்தரம்,முத்துகருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்