சிறிய கட்சிகள் ஆதரவு: கோவா முதல்வராக பாரிக்கர் இன்று பதவியேற்கிறார்

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      அரசியல்
Manohar Parrikar(N)

கோவா  - கோவாவில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்கிறது. முதல்வராக மனோகர் பாரிக்கர் இன்று மாலை பதவியேற்கிறார்.

முயற்சி வெற்றி
மகாராஷ்ட்ர கோமன்டக் கட்சி, கோவா முன்னணி கட்சி மற்றும் 3 சுயேச்சைகள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து கோவாவில் ஆட்சியைத் தக்க வைக்கும் பாரதிய ஜனதாவின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா மற்றும் ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கோவா ஆளுநரைச் சந்தித்த மனோகர் பாரிக்கர், ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

கவர்னர் அழைப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவா முதல்வராக மனோகர் பாரிக்கரை நியமனம் செய்து, அவரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்து கவர்னர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக கவர்னரின் செயலாளர் ரூபேஷ் குமார் தாகூர் அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பாரதீய ஜனதா கட்சி சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மனோகர் பாரிக்கரை முதல்வராக கவர்னர் நியமனம் செய்து உள்ளார். அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் மெஜாரிட்டியை சட்டசபையில் 15 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

21 உறுப்பினர்கள் ...
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 13 இடங்களையும், மகாராஷ்ட்ர கோமன்டக் கட்சி 3 இடங்களையும், கோவா முன்னணிக் கட்சி 3 இடங்களையும் பெற்றுள்ளன. இவை தவிர சுயேச்சைகள் 2 பேர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, பாரதிய ஜனதாவிற்கு 21 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

மணிப்பூரிலும் ...
இதேபோல், மணிப்பூரிலும் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாரதிய ஜனதா உரிமை கோரியுள்ளது.60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் தமக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மணிப்பூரில் 28 இடங்களில் வென்று தனிப்பெரும் ‌கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரசும் ‌ஆட்சியமைக்க கோரியுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: