முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழங்குடியின பெண்களுடன் உலக பெண்கள் தினவிழா

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

பழங்குடியின பெண்களுடன் உலக பெண்கள் தினவிழா அரக்கோணத்தில்; கொண்டாடபட்டது. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் டாக்டர் விசுவநாத் நலவாழ்வு மற்றும் கல்வி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் பழங்குடியின பெண்களுக்கு சுயதொழில் திறன் வளர்ச்சி பயிற்சி காலையிலும், மாலை சான்று வழங்குதலுடன் உலக பெண்கள் தினவிழாவும் கொண்டாடபட்டது. இந்த விழாவிற்கு செயலாளர் மற்றும் அறங்காவலர் குளோரி வசந்தரூபி தலைமை தாங்கினார். கணினி ஆசிரியை ஷோபா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக குருவராஜபேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி, அரக்கோணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பியுலாகிறிஸ்டி சாந்தமணி,மற்றும் காவல்துறை ஆய்வாளர் கலைச்செல்வி, உதவி ஆய்வாளர் உமாராணி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரும் பழங்குடி இன பெண்களுக்கு புத்தாடை, நினைவு பரிசு, தையல் பயிற்சி முடித்த எட்டு பேருக்கு சான்று உள்ளிட்டவைகளை வழங்கி பேசினார்கள். மேலும், அறங்காவலர் வெங்கடேசலு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வேலவன் ஆகியோரும்; வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக நிகழ்வுகளை மேலாண்மை அறங்காவலர் காபிரியேல் ஜேம்ஸ் தொகுத்து வழங்கினார். இறுதியில் தையல் ஆசிரியை நிர்மலா நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்