அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி:அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      திருவண்ணாமலை
photo04

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 104 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேவூர்.எஸ்.இராமச்சந்திரன், வழங்கி பேசுகையில் ‘மக்களால் நான், மக்களுக்காக நான் என மக்களாட்சி நடத்தி வங்கக் கடலோராம் சந்தனப் பேழையில் உரங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் சார்பாக இன்று நாகப்பாடி அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் 104 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு பல நலத்திட்டங்களை வகுத்து, அதை சரியான முறையில் தொகுத்து, சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அம்மா அவர்களின் திட்டங்கள் ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களின் வாழ்க்கையினை செம்மைப்படுத்தி வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்களது அரசு, வேலை இல்லாத தொழிற்கல்வி மாணவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் தொகை வழங்கும் திட்டம், முதல் பட்டதாரி மாணவர்களுக்கு "யுவபாரதி" திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், வித்யா போசாக் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில உதவும் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், நாகப்பாடியில் அமைந்துள்ள அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கடந்த 5 ஆண்டுகளில் இக்கல்லூரியை சேர்ந்த 1034 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்கல்லூரிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு விடுதி அமைக்கப்பட்டுள்ளது, மாணவர்களின் ஆய்வக தேவைகளுக்காக உயர்மின் அழுத்தம் அளிக்கப்பட்டுள்ளது, கல்லூரி ஆரம்பித்த முதல் மூன்றாண்டுகளுக்கு ஆய்வக உபகரணங்கள், தளவாடங்கள், கணிப்பொறிகள், மரச்சாமான்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கு தாராளமாக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், இந்த வருடம் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 100 சதவிகிதம் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதா அருணாச்சலம், கல்லூரி முதல்வர் ஜெ.மேகலா, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: