முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் கடை முற்றுகை போராட்டம் நடத்த ஆட்கள் இல்லாததால் திருமங்கலத்தில் தி.மு.க.வினர் தவிப்பு!

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- ரேஷன் கடை முற்றுகை போராட்டம் நடத்திட ஆட்கள் இல்லாததால் திருமங்கலம் நகரில் தி.மு.க நிர்வாகிகள் தவித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறி தமிழகம் முழுவதிலும் தி.மு.க.வினர் ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.இந்நிலையில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமங்கலம் நகரில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் உத்தரவின் படி மதுரை தெற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் தி.மு.க.வினர் முற்றுகையிட்டு பிரமாண்டமான முறையில் போராட்டம் நடத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று காலை திருமங்கலம் நகரிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள் என்று போலீசாரும்,பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக போராட்டத்திற்கு தி.மு.க.வினர் திரளாததால் உடனடியாக போராட்டத்திற்கு பெண்களை திரட்டிக் கொண்டு வருமாறு மேலத்தெருவைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.இதையடுத்து அவசர அவசரமாக செயல்பட்ட அவர் தனது வார்டில் உள்ள பெண்களை அழைத்துக்கொண்டு மீனாட்சியம்மன் கோவில் பின்புறமிருந்த ரேசன் கடைக்கு வந்தார்.இதையடுத்து கூட்டம் வந்ததையறிந்த தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் தலைமையிலான தி.மு.க.வினர் அங்கு திரண்டு ரேஷன் கடை முற்றுகை போராட்டம் நடத்தினர்.தி.மு.க போராட்டம் நடத்தியபோது அந்த ரேசன் கடையில் அனைத்து குடிமை பொருட்களும் விநியோகம் செய்யப்படுவதாக எழுதியிருந்தது தி.மு.க.வினரை அப்செட் ஆக்கியது.இருப்பினும் ஒருவழியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து முற்றுகையை முடித்துக்கொண்டு 40க்கும் உட்பட்டோரே கைதாகினர்.மொத்தத்தில் திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ரேசன் கடைகள் அனைத்தும் தி.மு.க முற்றுகை போராட்டம் இல்லாததால் வழக்கம் போல் செயல்பட்டன.முற்றுகை போராட்டத்திற்கு ஆட்கள் இல்லாததால் திருமங்கலம் நகரில் தி.மு.க.வினர் தவித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்