முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபிசெட்டிபாளையம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரக்கன்கோட்டை வாய்க்கால் மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களில் ரூ.44.09 இலட்சம் மதிப்பீட்டில் 14 குடிமராமத்துப் பணிகளை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் 5 பணிகள் ரூ.12.33 இலட்சம் மதிப்பீட்டிலும், தடப்பள்ளி வாய்க்கால்களில் 9 பணிகளுக்கு ரூ.31.76 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.44.09 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர் .சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலையில் 14 குடிமராமத்துப் பணிகளை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவங்கி வைத்தார்.

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் குடிமாராமத்துப் பணிகளை துவக்கி வைத்து தெரிவித்தாவது.

தமிழகத்தில் வறட்சியை எதிந்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் மறைந்த   தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க ஆணையிட்டார்கள். 30 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1519 குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கிராமம், மணிமங்கலம் ஏரியினை சீரமைத்திடும் குடிமராமத்து திட்டப் பணிகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  துவக்கி வைத்தார்கள்.

குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

          பண்டைய காலங்களில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்துக் கால்வாய்களை பொதுமக்களின் பங்களிப்புடன் குடிமக்களால் மராமத்துப் பணிகள் செய்யப்பட்டதால் இத்திட்டம் குடிமராமத்துப் பணிகள் திட்டம் என முன்னோர்களால் அழைக்கப்பட்டது. நீர்வள ஆதாரங்களாக விளங்கும் குளங்கள், ஏரிகள், கால்வாய்களில் குடிமக்களால் மராமத்துப் பணிகள் செய்து நீர்நிலைகளை பராமரிக்கும் பணிகளே குடிமராமத்துப் பணிகள் ஆகும். இந்தப் பணிகள் தமிழக அரசால் சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னர் 1975ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. இந்த குடிமராமத்துப் பணிகள் திட்டம் நடப்பு ஆண்டில் தமிழக அரசால் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக சுமார் 100 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.

          பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, கோவை மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளை குடிமராமத்துப் பணிகள் மூலம் சீரமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 56 பணிகள் சுமார் 393.29 இலட்சங்கள் (3.93 கோடி) மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கீழ்பவானி பாசனத் திட்டக் கால்வாய்களில் 39 பணிகள் ரூபாய் 321.20 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத் திட்டத்தில் 3 பணிகள் ரூபாய் 28.00 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திட்டத்தில் 9 பணிகள் ரூபாய் 31.76 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திட்டத்தில் 5 பணிகள் ரூபாய் 12.33 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் முதற்கட்டமாக செய்து முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

          இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கீழ்பவானி முறைநீர்ப்பாசனத்திற்குட்பட்ட 39 பாசன சபைகள் மூலமாகவும், காலிங்கராயன் பாசனத்திற்குட்பட்ட 3 பாசன சங்கங்கள் மூலமாகவும், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 10 சங்கங்கள் மூலமாகவும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 5 பாசன சங்கங்கள் மூலமாகவும் சங்கங்களின் பங்களிப்புடன் பாசனதாரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வாய்க்கால் பராமரிப்பு பணிக்கும் மதிப்பீடுகள் ரூபாய் 10.00 இலட்சங்களுக்கும் மிகாமல் பாசனதாரர்களின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்டு, வாய்க்காலில் உள்ள முட்செடிகளை அகற்றுதல், கால்வாயை தூர்வாருதல், உடைந்துபோன மதகுகளை சீரமைத்தல், மதகுகளுக்கு கதவுகளை சீரமைத்து பொருத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் ஆகிய பணிகளை குடிமராமத்துப் பணிகளாக செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் யு10 பாசனப் பகுதியில் மட்டும் சுமார் 5924-59 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இத்திட்டப் பணிகள் செயலாக்கம் செய்யப்படுவதால் தண்ணீர் கடைமடை வரை சேதாரமின்றி சென்றடையும்.   ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 56 பணிகள் ரூபாய் 393.39 இலட்சங்கள் (3.93 கோடி) மதிப்பீட்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடிமராமத்துப் பணிகள் ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. இதுவே முதல்முறையாகும். கிராமப்புற விவசாயிகள் நிலத்தடி நீர் ஆதாரத்தினை பெருக்குவதற்காக குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வார வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை விரைவில் நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் இப்பணிகள் மூலம் விவசாயிகள் அனைவரும் நன்கு பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இவ்விழாவில் ஈரோடு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாச்சலம், பவானிசாகர் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திருச்செந்தில்வேலன், கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.மோகன்குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago