முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி கலெக்டர் தொடக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை -மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அருகே உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ், தொடங்கிவைத்தார்.

நீர் ஆதாரங்களுக்கு கேடு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் வேருடன் அகற்றிட உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து பொது இடங்கள், தனியார் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விரைந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் நிர்வாகத்தின் மூலம் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

மேலும், மாணவர்களிடம் சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் அபாயம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் திருப்பரங்குன்றம் வட்டம் தென்கால் கண்மாயின் கரை மற்றும் நீர்;வரத்து பகுதிகளை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எம்.முத்துபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அபிதா ஹனீப், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் நேரு, தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்