முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டி அருகே அதி நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் மாவட்ட சிறைச்சாலை கட்டிடப்பணிகள்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      தேனி
Image Unavailable

 ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் அருகில் தேனி மாவட்ட சிறைச்சாலைக்கான கட்டிடப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.தமிழக அரசு கடந்த ஆண்டு முன்னால் முதல்வர் ஜெயலலிதாவால் 110விதியின் கீழ் காவலர் வீட்டுவசதிக் கழகம் சார்பில் ரூபாய் 7கோடி மதிப்பீட்டில் தேனி மாவட்டத்தில் சிறைச்சாலை கட்ட உத்தரவிட்டிருந்தார்.அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சமத்துவபுரம் அருகில் 7.60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட பணிகள் தற்போது 40 சதவிதம் பூர்த்தியடைந்துள்ளது.

                     24அடிக்குஇரண்டு அடுக்கு சுற்றுசுவர் பாதுகாப்புடன்,மூன்று உயர்நிலை பாதுகாப்பு கோபுரங்கள்,250 கைதிகள் அடைக்கும்படியான கைதிகள் அறை,சமையல் அறைக்கான தனி ப்ளாக்,தனி மற்றும் பொதுக் கழிவறை வசதிகளுடன் கூடிய முற்றிலும் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டிடம் கட்டப்பட்டுவருகிறது.இவ்வருட இறுதியில் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சிறைச்சாலை கட்டிடம் முழுமையடைந்து செயல்பாட்டிற்கு வரும் போது மாவட்டத்திலிருந்து மதுரை உள்ளிட்ட தூர ஊர்களுக்கு கைதிகளை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் காவலர்களுக்கு ஏற்படாது.இதனால் காவலர்களுக்கு பணிசுமை குறைந்து காலவிரையமும் தடுக்கப்படும்.மேலும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு கைதிகளை கொண்டு செல்வதும்.பார்வையாளர்கள் அலைச்சலும் குறையும்.அதே சமயம் இங்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறுவர் சீர்திருத்த பள்ளி வளாகப்பணிகள் சிலகாரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.எனவே சிறைச்சாலை பணிகளோடு பாஸ்டன் பள்ளி மற்றும் காவலர்களுக்கு குடியிருப்புகளும் சேர்ந்தே கட்டி முடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பும் நிலவுகிறது.மகளிர் கைதிகளுக்கான தனி வாளகமும் கட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்