முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்ய சபைக்கு மாயாவதி போட்டியிடுவதில் சிக்கல்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ  - உ.பி.யில் நான்கு முறை முதல்வராக இருந்த மாயாவதி யின் பகுஜன் சமாஜ் கட்சி இம்முறை 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதுபோல் மிகக்குறைந்த இடங்களை இக்கட்சி பெற்றது இதுவே முதல்முறையாகும்.  இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உ.பி. உறுப் பினர்கள் 10 பேரின் பதவிக்காலம் 2018, ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. பகுஜன் சமாஜ் சார்பில் மாயாவதி உள்ளிட்ட இருவர், பாஜக, காங்கிரஸ் சார்பில் தலா ஒருவர், சமாஜ்வாதி கட்சி சார்பில் 6 பேரின் பதவிக் காலம் முடிவடைகிறது.

 மாயாவதி வெற்றிபெற வாய்ப்பில்லை
உ.பி. சார்பில் மாநிலங் களவை உறுப்பினர் ஆக 35 முதல் 40 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதால், அடுத்த ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் மாயாவதி வெற்றிபெற வாய்ப்பில்லை. எம்எல்ஏ அல்லது எம்.பி. என தொடர்ந்து ஏதாவது ஒரு பதவியில் இருந்த வந்த மாயாவதி எந்தவொரு பதவியும் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 47 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சமாஜ்வாதி, மாநிலங்களவைக்கு ஓர் உறுப் பினரை அனுப்ப வாய்ப்புள்ளது. வெறும் 7 எம்எல்ஏக்களை பெற்ற காங்கிரஸுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் 325 எம்எல்ஏக்கள் பெற்றுள்ள பா.ஜ.க மீதம் உள்ள 9 இடங்களுக்கும் உறுப்பினர்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்