முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சட்டசபை தேர்தலில் 3600 பேருக்கு டெபாசிட் காலி

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ   -  உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதால் அங்கு போட்டியிட்ட 3,600 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 4,863 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அங்கு பதிவாகும் மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெற வேண்டும். அவ்வாறு பெறவில்லை எனில் வேட்பாளர் செலுத்திய டெபாசிட் தொகை வழங்கப்பட மாட்டாது.அந்த வகையில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 76 சதவீதத்தினர், அதாவது 3,696 பேர் தாங்கள் செலுத்திய டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த சட்டசபை தேர்தலைக் காட்டிலும் குறைவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்