முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா-மணிப்பூர் விவகாரம்: லோக்சபையில் காங். ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முடிவு

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நிகந்துவரும் அரசியல் விவகாரம் தொடர்பாக லோக்சபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ள போதிலும் பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கவர்னர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினையை விவாதிக்கக்கோரும் ஒத்திவைக்கும் தீர்மானத்தை லோக்சபையில் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

லோக்சலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் வேறு சில கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் சேர்ந்து இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவரவும் அதுகுறித்து விவாதிக்க கோரவும் உள்ளனர். சட்டத்திற்கு விரோதமாக பாரதிய ஜனதா செயல்படுகிறது. கோவா, மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது முரணானது. இந்த இரண்டு மாநிலங்களிலும் தனிப்பட்ட முறையில் காங்கிரஸ்தான் அதிக இடங்களில் வென்று உள்ளது என்றும் கார்கே தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்