முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய படையினர் 12 பேர் கொலை விசாரணைக்கு ராஜ்நாத்சிங் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சட்டீஷ்கர் மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் 12 பேர் நக்சலைட்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டது குறித்து ஆத்மபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் இந்த படுகொலையில் பாதுகாப்பு கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பது  குறித்து அறிய விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பாராளுமன்ற லோக்சபையில் தெரிவித்தார்.

கடந்த 11-ம் தேதி அன்று சட்டீஷ்கர் மாநிலத்தில் சாலை பணியில் ஈடுபட்டிருந்தபோது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியதில் 12 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மரணமடைந்த வீரர்களில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் அடங்கும். மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் நக்சலைட்கள் பறிமுதல் செய்து தப்பியோடிவிட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆத்மசோதனை:

இந்த படுகொலை சம்பவம் குறித்து நாம் ஆத்மசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன? பாதுகாப்பு குளறுபடி இருக்கிறதா என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று லோக்சலையில் ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்தார். சட்டீஷ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியது. இது கடந்தாண்டு அவர்கள் ஒடுக்கப்பட்ட விரக்தியில் நடந்த சம்பவமாகும். இருந்தபோதிலும் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு என்ன காரணம், பாதுகாப்பில் ஏதாவது குளறுபடி உள்ளதா என்பதை அறிய இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். உண்மையான காரணம் என்பது தெரியவந்தால் இனிமேல் இந்தமாதிரியான படுகொலை சம்பவம் நடக்காமல் தடுக்கமுடியும். அல்லது குறைக்க முடியும்.

கடந்தாண்டு நக்சலைட்கள், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் பாதுகாப்பு படையினர் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். நக்சலைட்கள் 135 பேர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். 779 பேர்களை கைது செய்துள்ளனர். 1198 பேர் சரணடைந்துள்ளனர் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். வன்முறை சம்பவங்களும் 15 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு 466 வன்முறை சம்வங்கள் நடந்தன. இது கடந்த 2016-ம் ஆண்டில் 395 ஆக குறைந்துள்ளது. பாதுகாப்பு படையினரால் நக்சலைட்கள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது என்றும் ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்