முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமை கருவேலம் மரங்கள் அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் : கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் சீமை கருவேலம் மரங்கள் அகற்றுவது தொடர்பான உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய உத்திரவு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட கலெக்டர் அவர்கள் மாவட்டத்தில் அனைத்துத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் வளர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டா நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் நோட்டிஸ் வழங்கி சீமை கருவேல மரங்களை பட்டாதாரர்களே அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சீமை கருவேல மரங்களை மேலாக வெட்டினால், மீண்டும் வெட்டப்பட்ட இடத்திலிருந்து வளரும் தன்மை உடையது. எனவே மரத்தை வேருடன் அகற்ற வேண்டும். பொதுப்பணித்துறை ஏரிகளில் உள்ள மரங்களையும், நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரங்களிலுள்ள சீமை கருவேலமரங்களை அகற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறையினரும் சீமை கருவேல மரங்கள் குறித்த விவர அறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும் என அறிவுறுத்தினார்கள். சீமை கருவேல மரம் மற்றும் நாட்டு கருவேல மரம் அடையாளம் கண்டு, சீமை கருவேல மரங்களை மட்டுமே அகற்ற வேண்டும். நாட்டு கருவேல மரங்களை அகற்றக்கூடாது எனவும் தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சௌரிராஜன், மாவட்ட வனச்சரக அலுவலர் ரிட்டோசிரியாக்., சார் ஆட்சியர்கள் அருண்தம்புராஜ்., வி.பி.ஜெயசீலன்., கிள்ளிசந்திரசேகர், துணை ஆட்சியர் (பயிற்சி) அருண்ராஜ்., தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சி.ராஜேந்திரன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கண்ணன், காஞ்சிபுரம் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராமசாமி, நகராட்சி ஆணையர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்