முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின்முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      சென்னை

சென்னை, காஞ்சிபுரம், தண்டலம், கோவூர் போஸ்ட், குயவர் தெரு, எண்.1/52 என்ற முகவரியில் சிவகுமார், வ/31, த/பெ.சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பிரேமா என்பவர் உடல் நிலை சரியில்லாமல் சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிவகுமார் நேற்று (13.03.17) இரவு தனது இருசக்கர வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மனைவியை பார்ப்பதற்காக மருத்துவமனையின் உள்ளே சென்றுள்ளார். பின்னர் நேற்று (14.03.17) காலை சிவகுமார் திரும்பி வந்து இருசக்கர வாகனத்தை பார்த்த போது அதை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது உடனே சிவகுமார் இது தொடர்பாக எப்-2 எழும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.எழும்பூர் காவல் நிலைய போலீசார் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகiளை ஆய்வு செய்து மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜாகீர் உசேன், வ/30, த/பெ.முத்துவாப்பா, எண்.2. சவரி முத்து தெரு, புதுப்பேட்டை சென்னை-2 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ளுயீடநனேடிச ஞடரள இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஜாகீர் உசேன் புரோக்கராக வேலை செய்து வருவது தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago