முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் தொடர்ந்து போர்நிறுத்தமீறல் லோக்சபையில் மத்திய அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர்நிறுத்த மீரல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருதோடு தீவிரவாதிகள் ஊடுருவலையும் ஊக்குவித்து வருகிறது என்று லோக்சபையில் நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற லோக்சபையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் கூறியதாவது:-

போர்நிறுத்த மீறல்:

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடுமட்டுமல்லாது தீவிரவாதிகள் ஊடுருவலை ஊக்குவித்தும் எல்லையில் அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தினர்களின் அத்துமீறல்களையும் போர்நிறுத்த மீறல்களையும் இந்திய ராணுவத்தினர்களும் எல்லை பாதுகாப்பு படையினரும் சேர்ந்து   திறமையாக தடுத்து வருவதோடு பதிலடியும் கொடுத்து வருகின்றனர் என்று அமைச்சர் அஹீர் தெரிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 228 முறையும் சர்வதேச எல்லைப்பகுதியில் 221 முறையும் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டுள்ளனர் என்று உறுப்பினரின் எழுத்துமூலமான கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் அஹீர் தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தினர்களின் அத்துமீறல்களை முறியடிக்க இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். 83 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவ வீரர்கள் 8 பேர் வீரமரணமடைந்தனர் மற்றும் 74 பேர் படுகாயம் அடைந்தனர். எல்லை பாதுகாப்பு படையினர் 5 பேர் வீரமரணமடைந்தனர் மற்றும் 25 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அமைச்சர் அஹீர் தெரிவித்தார்.

இந்தாண்டு கடந்த பிப்ரவரி மாதம் முடியை எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் 22 போர்நிறுத்த மீறல்களும் சர்வதேச எல்லைப்பகுதியில் 5 போர் நிறுத்த மீறல்களும் நடந்துள்ளன என்றும் போர்நிறுத்தத்தில் ஈடுபடாமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தானை தூதரக ரீதியாக இந்தியா வற்புறுத்தி வருவதாகவும் அமைச்சர் அஹீர் மேலும் தெரிவித்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்