முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மாநகராட்சி தேர்தல் ஏப்ரல் 22-ம் தேதி நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டெல்லி மாநகராட்சிகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் 22-ம் தேதி தேர்தல் நடக்கும் என்று டெல்லி மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

டெல்லியில் 3 மாநகராட்சிகள் உள்ளன. டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என்று 3 மாநகராட்சிகள் உள்ளன. இந்த 3 மாநகராட்சிகளிலும் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா ஆட்சி செய்து வருகிறது. கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த பல மாதங்களாக எதிர்பார்த்து வந்தன.

தேர்தல் தேதி:

இந்தநிலையில் டெல்லி மாநகராட்சிகள் தேர்தல் தேதியை டெல்லி மாநில தேர்தல் கமிஷனர் ஸ்ரீவஸ்தவா அறிவித்துள்ளார். 3 மாநகராட்சிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 22-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 25-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் நேற்று
நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

வேட்புமனுத்தாக்கல்:

மார்ச் 27-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம். ஏப்ரல் 3-ம் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 5-ம் தேதி. வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாள் ஏப்ரல் 8. வேட்பாளரின் செலவு உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து 5.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
பழைய முறைப்படி வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பதை கொண்டுவர வேண்டும் என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜரிவால் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ஸ்ரீவத்ஸவா, மின்னணு வாக்குப்பதிவுதான் பாதுகாப்பானது. மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்றால் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவை நடத்தும் முறை அடிப்படையிலேயே தேர்தல் ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதன்படியே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்