முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் வறட்சி காலங்களில் கால்நடை தீவனம் அபிவிருத்திக்காக அசோலா மற்றும் நீர்மத்தாவர தீவனங்களை வளர்க்க வேண்டும்: கலெக்டர் சி.அ.ராமன், வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் இணை இயக்குநர் வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தில் விவசாயிகள் வறட்சி காலங்களில் கால்நடை தீவனம் அபிவிருத்திக்காக அசோலா மற்றும் நீர்மத்தாரை தீவனங்களை வளர்க்க அசோலா மற்றும் நீர்மத்தாரை தீவன வளர்ப்பு நேரடி செயல்விளக்க கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது:-அசோலா என்பது கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவனப் பாசியாகும். இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இப்பாசியை மரத்தடி நிழலில் வளர்க்க வேண்டும். முதலில் 2 .2 மீட்டர் நீளம் மற்றும் அகலத்தில் அரை அடி ஆழத்திற்கு குழி அமைத்து அதில் பாலித்தீன் விரிப்பை போட்டு அதில் செம்மண், ஈரமான மாட்டு சானம் மற்றும் 200 கிராம் சூப்பர் பாஸ்பேட் இட வேண்டும். பிறகு அதில் தண்ணீர் முழுவதும் நிரப்பி அதன்பின் அசோலாவை போட்டு விட வேண்டும். இப்பாசியானது 15 நாட்களில் நன்றாக வளர்ந்தபின் கால்நடைகளுக்கு தினமும் 200 கிராம் தீவனத்துடன் கலந்து போடலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை நீரை மாற்ற வேண்டும். இதனால் கால்நடைகள் நன்றாக பால் கொடுப்பதோடு ஆரோக்கியமாகவும் வளரும்.நீர்பத்தாவர தீவன வளர்ப்பு முறையில் முதலில் தீவன சோளம் அல்லது தீவன மக்காச்சோளத்தை அரை கிலோ பிளாஸ்டிக் டிரேயில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி (1 லிட்டர்) பிறகு அதில் 40 மில்லி லிட்டர் வினிகர் ஊற்றி விதைகளை நன்றாக அலச வேண்டும். பிறகு அதை ஒரு நாள் முழுக்க தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவேண்டும். மறுநாள் டிரேயில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு விதைகளை மட்டும் ஒரு ஈரத்துணியில் 2 நாட்களுக்கு கட்டி வைக்க வேண்டும். பிறகு ஏற்கனவே தயாரித்திருக்கும் வைக்கோலை (வினிகரில் நன்றாக அலசிய வைக்கோல்) தண்ணீர் இல்லாமல் பிழிந்து அதை குழிகள் உள்ள டிரேயில் பரப்ப வேண்டும். பிறகு ஈரத்துணியில் வைத்திருந்த விதைகளை அதில் பரப்பி ஒரு ஈரக்கோணிப்பையை அதன்மேல் மூட வேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை அதில் லேசாக தண்ணீர் தெளிக்க, 7-10 நாட்களில் நன்றாக முளைகட்டி வளர்ந்து கால்டைகளுக்கு தீவனமாக அளிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும் என்று அசோலா மற்றும் நீர்மத்தாவர தீவன வளர்ப்பு நேரடி செயல்விளக்க கூட்டத்தில் கலெக்டர் சி.அ.ராமன், விளக்கமளித்தார்.அதனைத் தொடர்ந்து அதனருகில் அமைந்துள்ள விதை பரிசோதனை நிலையத்திற்கு சென்று வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் விதைகளின் முளைப்புத் திறனை பரிசோதனை செய்வதை கலெக்டர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுப்புலட்சுமி, உதவி இயக்குநர் சத்தியமூர்த்தி மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்