முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரப்பதிவு தடையை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல்லில் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -பத்திரப்பதிவு தடையை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல்லில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், கட்டிட பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். அவர் கூறுகையில், கடந்த 2016ம் ஆண்டு சென்னை உயர்ஞிதிமன்றம் பத்திரப்பதிவுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டு திருமண செலவு, பெரிய மருத்துவசெலவு, பிள்ளைகளின் கல்வி செலவு இவற்றின் அவசரத் தேவைக்கு தங்கள் சேமிப்பில் வாங்கி வைத்துள்ள மனை மற்றும் வீடுகளை விற்பனை செய்ய இயலாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கடன் பெற்று முதலீடு செய்த தொழில் தற்போது முடங்கியுள்ளது. வாங்கிய கடனை கட்ட இயலாமலும், வட்டியை செலுத்த இயலாமலும் பரிதவித்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வந்தது. ஆனால் இன்று பத்திரப்பதிவு தடை உத்தரவால் அவர்கள் வேலையின்றி வருமானமின்றி குடும்பத்துடன் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் செங்கல், சிமெண்ட், ஜல்லி, இரும்புக் கம்பிகள், பெயிண்ட் வணிகமும் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
 மக்களால் நான், மக்களுக்காக நான் என்று வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா இன்று உயிருடன் இருந்திருந்தால் இத்தனை மாதம் காலம் தாழ்த்தாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு பத்திரப்பதிவு தடையை ரத்து செய்ய ஆவண செய்து காப்பாற்றி இருப்பார். எனவே உடனடியாக பத்திரப்பதிவு தடையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
 முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தினை திண்டுக்கல் வர்த்தகர் சங்க தலைவர் எஸ்.கே.சி.குப்புசாமி, துணைத்தலைவர் ஜி.சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். போராட்டத்தில் பொதுமக்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், பில்டர்ஸ், பொறியாளர்கள், முகவர்கள், பத்திர எழுத்தர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்